Brandix : பெண்களுக்கு வலுவூட்டுவதில் ஜொலித்திடும் நட்சத்திரம்

Published By: Vishnu

24 Aug, 2023 | 05:10 PM
image

நிறுவனசார் தலைமைத்துவத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்தி, 2023 ஆம் ஆண்டின் பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் வழங்கும் நிகழ்வில் மிகவும் சிறந்த பெண்களுக்கு நட்பான பணியிடம் விருதை Brandix சுவீகரித்திருந்தது.

மேலும் ஒன்பது நிறுவனங்களுடன் இணைந்து இந்த விருதை Brandix பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. AICPA மற்றும் இலங்கை பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CIMA) ஆகியன SATYN சஞ்சிகையுடன் இணைந்து இந்த கௌரவிப்பை வழங்கியிருந்தன.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் ஆகியவற்றில் Brandix காண்பிக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக இந்த கௌரவிப்பு அமைந்திருந்தது. 

இலங்கையின் முன்னணி ஏற்றுமதியாளராகத் திகழும் Brandix, பெண்களுக்கு வலுவூட்டுவதற்கான சிறந்த முன்மாதிரியான நிறுவனமாக அமைந்திருப்பதுடன், ஆரோக்கியம், நிபுணத்துவ வளர்ச்சி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்ட சூழலை வழங்குகின்றது.

இலங்கையில் Brandix இன் 77% ஆன ஊழியர்கள் பெண்களாக அமைந்திருப்பதுடன், சிறந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திறமைசாலிகளில் 27% ஆனவர்கள் பெண்களாக அமைந்துள்ளனர்.

மேலும், நிறுவனத்தின் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களில் சுமார் 40% ஆன பெண்களின் பங்கேற்பு காணப்படுவதுடன், பணிப்பாளர் சபை மட்டத்தில் 17% ஆனவர்கள் பெண்களாகவும் அமைந்துள்ளனர்.

உள்ளடக்கத்துக்கான Brandix இன் அர்ப்பணிப்பு என்பது அதன் பிரத்தியேகமான கொள்கைகளினால் ஆதரவளிக்கப்பட்டுள்ளன.

இதில் இழிவுபடுத்தல் மற்றும் துன்புறுத்தல் இல்லாத பணியிடக் கொள்கை மற்றும் குரலெழுப்பல் கொள்கை போன்றன அடங்கியுள்ளன. குழந்தைகள் பராமரிப்பு உதவி, நெகிழ்ச்சியான பணி ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக பெண் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சில முக்கிய பிரிவுகள் அடங்கியிருந்தன. அதில், பெண்களுக்கு நட்பான கொள்கைகள், சகல நிலைகளிலும் பிரதிநிதித்துவம், சம்பளம், பயிற்சி மற்றும் விருத்தி மற்றும் பெண்களுக்கு நட்பான பணியிடங்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு போன்றன அடங்கியுள்ளன.

இந்த பிரிவுகள் ஒவ்வொன்றிலும், பணியிடங்களில் பெண்களை கொண்டாடும் அர்ப்பணிப்பை Brandix வெளிப்படுத்தியுள்ளதுடன், பெண்களை மையப்படுத்திய பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18
news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52