நுவரெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

21 Aug, 2023 | 09:40 AM
image

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20)  பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற குழுவினர் மீது குளவிகொட்டியதில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன்  அறுவர் குளவி கொட்டுக்குள்ளாகி சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இதில் மூவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சிவபொருமாள் தில்ஷான் என்ற 16 வயதுடைய  சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

குறித்த சிறுவன் குளவி கொட்டும் போது தப்பித்து ஓடுவதற்கு முயன்று தடுக்கி விழுந்ததால் கடுமையான குளவி கொட்டுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21