"அடித்தால் திருப்பி அடியுங்கள்" அது சட்ட வரம்புக்குட்பட்டதே; மலையக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் மனோ

Published By: Vishnu

20 Aug, 2023 | 06:59 PM
image

மலையக மக்களை யாரேனும் தாக்கினால் அந்த வன்முறைக்கு எதிராகவும், தற்காத்துக்கொள்ளவும், திருப்பி தாக்குங்கள் என மனோகதேசன் மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மாத்தறையில், மலையக மக்கள் சிலர் தாக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டிப் பேசிய மனோகணேசன், அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 'மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு' எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்முறையாளர்களுக்கு அடிதான் புரிகின்ற வார்த்தை எனில் அதை பேச நாம் தயார் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

நீதியரசர் இளஞ்செழியன் தனது தீர்ப்பு ஒன்றில், தற்காப்புக்காக திருப்பி அடிக்கும் உரிமையின் சட்டவரம்பு பற்றி கூறியுள்ளார். அதையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். ஆனால், நாம் பலமுறை சொல்லியும், அவரது அரசு, எமது மக்களுக்கு எதிராக பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடத்தும் அராஜகங்களை கண்டும் காணாமல் இருக்கிறது.

ஆகவே பெருந்தோட்டங்களில் எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தராவிட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண...

2024-05-26 15:10:14
news-image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு...

2024-05-26 19:35:01
news-image

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு...

2024-05-26 19:18:44
news-image

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார...

2024-05-26 19:08:02
news-image

ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை ஜனாதிபதி...

2024-05-26 18:20:46
news-image

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து...

2024-05-26 18:08:24
news-image

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன்...

2024-05-26 18:07:40
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2024-05-26 18:25:50
news-image

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

2024-05-26 17:53:19
news-image

மன்னாரில் பிரமாண்டமாக இடம்பெற்ற தேசிய மக்கள்...

2024-05-26 17:59:03
news-image

கைத்துப்பாக்கி , வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட...

2024-05-26 17:50:05
news-image

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு...

2024-05-26 17:26:01