ஹொங்கொங் புதிய தேசிய பாது­காப்புச் சட்டம் : சீனாவால் சிதைக்­கப்­படும் 'ஒரு தேசம் ஈராட்சி முறை’

Published By: Vishnu

20 Aug, 2023 | 08:17 PM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஹொங்­கொங்கில்  சீன அரசால் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் பாரிய விளைவுகளையிட்டு  தற்­போது சர்­வ­தேச மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும், சமூக செயற்­பாட்­டா­ளர்­களும், ஜன­நா­யகக் கோரிக்­கை­யா­ளர்­களும் கடும் அதி­ருப்­தியைத் தெரி­வித்­துள்­ளனர். இந்த தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் மூலம்  சீன அரசின் அடா­வடி சர்­வா­தி­கார ஆட்­சியை ஹொங்­கொங்கில் அமுல்படுத்­து­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.

ஹொங்­கொங்கில் 2020இல் சீன அர­சாங்கம் கொண்டு வந்த புதிய தேசிய பாது­காப்புச் சட்­டத்­திற்கு எதி­ராக அக்­கா­லத்தில் ஹொங்­கொங்கில் தொடர்ச்­சி­யான போராட்­டங்கள் நடை­பெற்று வந்­தன. இந்தப் போராட்­டங்­களை ஹொங்கொங்– சீன அர­சுகள் கடு­மை­யாக அடக்கி ஒடுக்கி வந்­தன.

ஹொங்கொங் புதிய தேசிய பாது­காப்புச் சட்டம்:

2020 ஜுன் 30 முதல் “ஹொங்கொங் சிறப்பு ஆட்சிப் பகு­தியில் தேசியப் பாது­காப்­பிற்­கான மக்கள் சீனக் குடி­ய­ரசின் சட்டம்” என்று தலைப்­பி­டப்­பட்ட புதிய தேசிய பாது­காப்புச் சட்டம் அமு­லுக்கு வரு­வ­தாக, ஹொங்­கொங்கின் தலைமைச் செய­ல­ரான கேரி லாம் அறி­வித்தார்.

சட்­டப்­படி  ஹொங்கொங் சீனாவின் ஒரு பகு­தி­யாகும். ஆனால் ஹொங்­கொங்­கிற்கு என தனி­யான அடிப்­படை அர­சியல் சட்­டமும், நீதித்­து­றையும், தன்­னாட்சி கொண்ட நிர்­வாக அரசும் நீடிக்கிறது. பல கட்சி ஜன­நா­யகம், பேச்­சு­ரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகி­யவை எல்லாம் ஹொங்­கொங்கில் உண்டு.

ஹொங்கொங் – சீனா வர­லாறு :

சீனாவின் மன்­ன­ராட்­சியின் கீழ் இருந்த ஹொங்கொங் தீவை 1842-ஆம் ஆண்டு நடந்த முதல் ஓப்­பியம் போரில் பிரிட்டன் கைப்­பற்­றி­யது. அதன் பின்னர் 1898ஆம் ஆண்டு சீனா­வி­ட­மி­ருந்து கூடுதல் நிலப்­ப­ரப்­பு­க­ளையும் சேர்த்து 99 ஆண்­டு­க­ளுக்கு குத்­த­கைக்கு எடுத்­தது பிரிட்டிஷ் அரசு. பிரிட்டன் ஆட்­சியில் ஹொங்கொங் ஒரு பெரும் வர்த்­தக நக­ராக உரு­வா­கி­யது.

மாவோவின் தலை­மையில் சீனக் கம்­யூனிஸ்ட் கட்சி 1949-ஆம் ஆண்டு சீனாவில் புரட்­சியை ஏற்படுத்தி  மக்கள் சீனக் குடி­ய­ரசைக் கட்­டி­ய­மைத்­தது. ஆயினும் அப்­போதும் ஹொங்கொங் பிரிட்டிஷ் கால­னி­யா­கவே இருந்­து­வந்­தது. பிரிட்டிஷ் கால­னித்துவ அரசை எதிர்த்து பல்­வேறு விடு­தலைப் போராட்­டங்கள் ஹொங்­கொங்கில் நடந்­துள்­ளன. அவை அத்­த­னையும் பிரிட்டிஷ் அரசால் ஒடுக்­கப்­பட்­டன.

பின்னர் 1997-இல் ஹொங்கொங்கை சீனா­விடம் கைமாற்­று­வ­தற்­கான வேலை­களை இரு­நா­டு­களும் தொடங்­கின. ஹொங்­கொங்கில் பிரிட்டன் நடை­மு­றைப்­ப­டுத்தி வந்த அதே ஆட்சி முறை­க­ளையும், ஜன­நா­யக உரி­மை­க­ளையும் 2047-வரை (ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு) நீடிக்­கும்­ப­டி­யான மற்றும் அங்கு முத­லீடு செய்­தி­ருக்கும் தமது நாட்டு முத­லா­ளி­களின் நலனைப் பாது­காக்­கும்­ப­டி­யான நிபந்­த­னை­க­ளுடன் 1997-ஆம் ஆண்டு ஹொங்கொங் சீனா­விடம் கைமாற்றிக் கொடுக்­கப்­பட்­டது.

பிரிட்டன், ஹொங்­கொங்கை சீனா­விற்கு திரும்பக் கொடுத்த வைபவம், 1997 ஜூன் 30 ஆம் திகதி நள்­ளி­ரவில் நிகழ்ந்­தது. அப்­போ­தைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் ,பிரிட்டிஷ் இள­வ­ரசர் சார்ள்ஸ் முன்­னி­லையில் பிரிட்டிஷ் கொடியை இறக்கி  மக்கள் சீனத்தின் கொடியும், கூடவே ஹொங்­கொங்கின் தனிக் கொடியும் ஏற்­றினார்.

அதன் பின்னர் 1997 ஜூலை 1ஆம் திகதி  முதல் ஹொங்­கொங்கில் ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ (One Country Two Systems) அமு லுக்கு வந்­தது. இந்த ஐம்­ப­தாண்­டு­களும் சீனா­வுக்கும் ஹொங்­கொங்­கிற்கும் இருக்கும் உறவு – “ஒரே நாடு, இரண்டு அமைப்பு முறை” என்­ப­தாகும். பிரிட்­டனின் கால­னி­யாக இருந்த ஹொங்கொங், சீனாவின் கால­னி­யாக இதன் பின்னர் தாரை­வார்க்­கப்­பட்­டது.

 ஐம்­ப­தாண்டு கால ஒப்­பந்தம் முடிந்த பிறகு ஹொங்கொங் அரசு எப்­படி இயங்­க­வேண்டும் என்­பதை சீனா தான் முடிவு செய்யும். இதுதான் இந்த ஒப்­பந்­தத்தின் சாரம். தாய்­நாட்­டோடு இணை­கிற பெரு­மிதம் சில­ருக்கு இருந்­தது. என்­றாலும், சீனாவின் ஆளு­கையில் ஹொங்­கொங்கின் சுதந்­திரக் காற்­றுக்குப் பங்கம் நேருமோ என்­கின்ற அச்சம் பல­ருக்கும்  இருந்­தது. ஹொங்­கொங்கின் சுயாட்­சியில் பெய்ஜிங் பெரு­ம­ளவில் தலை­யி­ட­வில்லை. முதல் ஐந்து ஆண்­டு­களின் முடிவில் அப்­ப­டி­யான அச்­சத்­திற்கு அவ­சி­ய­மில்லை என்­கிற முடி­வுக்குப் பலரும் வந்­தனர்.

ஹொங்கொங் அர­சியல் கட்­சி­களின் வர­லாறு எண்­ப­து­க­ளில்தான் தொடங்­கி­யது. ஹொங்கொங் அர­சியல் கட்­சிகள் மற்றும் இயக்­கங்கள், பெய்ஜிங் ஆத­ரவுக் கட்­சிகள் என்றும் ஜன­நா­யக ஆத­ரவுக் கட்­சிகள் என்றும் வகைப்­ப­டுத்­தப்­படும்.

1991இல் பிரிட்டிஷ் அரசு நடத்­திய முதல் தேர்­தலில் வெற்­றி­பெற்ற ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­களால் 1994இல் தொடங்­கப்­பட்­ட­துதான் ஜன­நா­யகக் கட்சி. அதற்கு முன்­பா­கவே 1992இல் பெய்ஜிங் ஆத­ர­வா­ளர்­களால்  தொடங்­கப்­பட்­டது ‘டெமோக்­ரட்டிக் எலையன்ஸ் ஃபோர் பெட்­டர்மென்ட் ஒஃப் ஹொங்கொங்- டி.ஏ.பி’கட்சி.  (Democratic Alliance For Betterment of Hong Kong- DAB). இன்னும் பல ஜன­நா­யக  பெய்ஜிங் ஆத­ரவுக் கட்­சிகள் அர­சியல் அரங்கில் உள்­ளன.

 சீனா மீது பொரு­ளா­தாரத் தடை:

 சீன சார்பு ஹொங்கொங் அரசின் ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ராக ஹொங்கொங் மீதோ, சீனா மீதோ பொரு­ளா­தாரத் தடை விதிக்க வெளி­நா­டு­க­ளுக்கு கோரிக்கை விடுப்­பதோ, ஹொங்கொங் சட்­டத்­திற்கும் கொள்­கை­க­ளுக்கும் இடை­யூறு ஏற்­ப­டுத்த அந்­நிய நாடுகள், நிறு­வ­னங்கள், அல்­லது அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து உத்­த­ர­வுகள் பெற்று செயல்­ப­டு­வது உள்­ளிட்ட அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இந்தப் புதிய சட்­டத்தில் தடை உள்ளன. அந்­நிய நாடு­க­ளுடன் கூட்டுச் சதி என்ற பிரிவின் கீழ் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியும்.

சீனாவின் எந்த ஒரு பகு­தியின்  நிலை­மை­களை மாற்­று­வது குறித்து அல்­லது எந்தப் பகு­தி­யையும் பிரிப்­பது குறித்து திட்­ட­மி­டு­வதும், அதற்கு ஏற்­பாடு செய்­வதும், அத்­த­கைய செயல்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­பதும், அதற்கு உத­வு­வதும், அத்­த­கைய செயல்­களைத் தூண்­டு­வதும் கடு­மை­யான பிரி­வி­னை­வாதக் குற்­ற­மாகச் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி ஹொங்கொங்கின் சுய நிர்­ணய உரிமை குறித்தோ அல்­லது திபெத்தின் விடு­தலை குறித்தோ யாரேனும் இனி சாதா­ர­ண­மாகப் பேசி­னா­லும்­ கூட தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் பிரி­வி­னை­வா­தத்தை தூண்­டிய குற்­றத்­திற்­காகக் கைது செய்ய முடியும்.

 தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­ப­டாது. இதன் கார­ண­மாக, அர­சியல் கைதிகள் சீனா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தற்கும் கடும் தண்­ட­னைகள் விதிக்­கப்­ப­டு­வ­தற்கும் வாய்ப்­புண்டு.

ஹொங்கொங் போராட்­டங்­களின் வர­லாறு :

ஹொங்­கொங்கில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தேசியப் பாது­காப்புச் சட்டம், ஜன­நா­யக விரோ­த­மா­கவும  ்ஹொங்­கொங் நக­ரத்­திற்குக் கொடுக்­கப்­பட்­டுள்ள சிறப்பு ஜன­நா­யக உரி­மை­களை மறை­மு­க­மாக ரத்து செய்யக் கூடி­ய­தா­கவும் இருக்கும் என்ற கார­ணத்­தி­னா­லேயே ஹொங்கொங் மக்கள் இச்­சட்­டத்தைக் கடு­மை­யாக எதிர்த்துப் போராடி வந்­தனர்.

சீனாவில் கைதிகள் முறை­யாக விசா­ரிக்­கப்­படமாட்­டார்கள் என ஹொங்கொங் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்கள் அஞ்­சி­னார்கள். பிற்­கா­லத்தில் போராட்டக் கு­ரல்­களை அடக்க இந்த சட்டம் பயன்­ப­டலாம் என்­கிற அச்­சமும் சேர்ந்­தது.

 2020 ஜூன் 9ஆம் திகதி  அன்றும் 16ஆம் திகதி அன்றும் ஹொங்கொங் வீதி­களில் லட்­சக்­க­ணக்­கானோர் அணி­வ­குத்­தனர். முந்­தை­யது வெண்­சட்டைப் பேரணி. பின்­னது கருஞ்­சட்டைப் பேரணி.

ஹொங்கொங் சுய நிர்­ணய உரிமை:

 புதிய தேசியப் பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் ஒருவர் கைது செய்­யப்­பட்டால், பெரு­ம­ள­வி­லான அபராதத் தொ­கையும், பத்­தாண்­டுகள் முதல் ஆயுள் தண்­டனை வரை   கூட தண்டனை வழங்க  முடியும்.

மேலும் ஹொங்­கொங்கில் கைது செய்­யப்­பட்ட நபரை விசா­ர­ணைக்­காக என்று கூறி சீனா­வுக்கு நாடு கடத்­தவும் முடியும்.

இச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் முறையும் முழுக்க முழுக்க ஜன­நா­யக விரோ­த­மா­ன­தா­கவும், ஹொங்­கொங்கின் தனிப்­பட்ட அடிப்­படை சட்­டங்­க­ளுக்கு முர­ணானதா­கவும் இருக்­கி­றது.

தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­களை விசா­ரிப்­ப­தற்­காக ஹொங்­கொங்­ நீ­தி­மன்­றங்­களில் தனிப் பிரி­வுகள் அமைக்­கப்­படும் என்றும் இத்­த­கைய வழக்­கு­களை விசா­ரிக்கும் நீதி­ப­தியை நிய­மிக்கும் அதி­காரம் ஹொங்கொங் நக­ரத்தின் தலைமைச் செய­ல­ருக்கு மட்­டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்­பி­டு­கி­றது.

ஒரு­வேளை குறிப்­பாக ஒரு வழக்கு மிகவும் ‘இர­க­சியம்’ வாய்ந்­தது என தலைமைச் செயலர் முடிவு செய்தால், அந்த வழக்கு விசா­ரணை வெளிப்­ப­டை­யான நீதி­மன்­றத்தில் நடத்­தப்­ப­டாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்­த­ர­விடும் அதி­கா­ரமும் அவ­ருக்கு உண்டு. மிகவும் முக்­கிய வழக்­கு­களை விசாரிக்கும் முறை முழுக்க முழுக்க ஜன­நா­யக விரோ­த­மா­ன­தா­கவும், ஹொங்­கொங்கின் தனிப்­பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணானதாகவும் இருக்கிறது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப் பதற்காக ஹொங்கொங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹொங்  கொங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகள் ஒருதலைப்பட்சமான தீர்வுகளாக இருக்க...

2026-02-17 14:36:54
news-image

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்...

2026-02-17 12:41:54
news-image

வட இலங்கையின் தொழில்துறை மறுஉயிர்ப்பு

2026-02-16 15:17:59
news-image

உறவுகளை சீர்செய்ய இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிடைத்திருக்கும்...

2026-02-16 11:30:18
news-image

இனப்பிரச்சினைத் தீர்வும் மாகாண சபைத்தேர்தலும் புதிய...

2026-02-16 11:15:10
news-image

வெட்­கப்­பட வேண்­டிய விவ­காரம்

2026-02-15 16:41:37
news-image

கிரிக்கெட் இரா­ஜ­தந்­திரம் சார்க்­கிற்கும் பொருந்­துமா?

2026-02-15 16:27:04
news-image

தமி­ழரை நோக்கி திருப்­பப்­படும் இன­வாதம்

2026-02-15 16:25:10
news-image

அர­சியல் மயப்­படும் மாகாண நிர்­வா­கங்கள்

2026-02-15 16:24:56
news-image

குடும்பிமலையும் கார்ல்-கஸ்டவ் லோஞ்சர்களும்

2026-02-15 16:24:27
news-image

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது

2026-02-15 16:08:51
news-image

போராடுவதா? அழிந்து போவதா?

2026-02-15 16:05:10