(எம்.வை.எம்.சியாம்)
வரட்சியான காலநிலை காரணமாக வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி வனவிலங்குகள் வருவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிலர் விஷம் கலந்த உணவுகளை கொடுத்து விலங்குகளை வேட்டையாடுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் வேட்டையாடப்பட்டதாக கூறி விற்பனை செய்யப்படும் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் எனவும் இவ்வாறான இறைச்சிகளை உட்கொள்வதால் மனிதர்களுக்கு உயிராபத்து ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் வில்பத்து, யால வனப்பகுதிகள் மற்றும் உடவளவை நீர்த்தேக்கத்தின் அண்மித்த பகுதிகளில் வாழும் விலங்குகள் நீரைப் பெற்றுக் கொள்ளும் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே நீர் காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விஷம் கலப்பதுடன், காட்டுப்பகுதிக்கு தீ வைத்து வன விலங்குகளை இறைச்சிக்காக கொலை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதாகக் கூறி சுற்றுலா பயணிகளுக்கும், குறித்த பகுதிகளை அண்மித்த பகுதிகளில் உள்ள பிரதேசங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவை மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இறைச்சியில் விஷம் காணப்படுமாயின் அதனை உட்கொள்வதால் எமக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். மரணம் கூட சம்பவிக்கலாம். இந்நிலையில் நிலவும் வரட்சியுடான காலநிலையில் அறியாத பகுதிகளுக்கு சென்று வேட்டையாடப்பட்டதாக கூறப்பட்டு விற்பனை செய்யப்படும் விலங்குகளின் இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM