ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள் தற்போதும் மறக்கவில்லை - அஜித் மன்னம்பெரும

20 Aug, 2023 | 08:33 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வங்குரோத்தடைச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது யார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் இதனை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு அமைச்சர்களும் தாம் செய்த மோசடிகளிலிருந்து தப்பித்து வெளிவருவதற்கு முன்னுரிமையளிக்கின்றார்களே தவிர , மக்களைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை.

காணி தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. மகாவலி காணியை விடுவிக்க வேண்டாம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மறுபுறம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தடுப்பதற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்துக்கு தீர்வு இல்லை. தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தெற்கிற்கு மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 

பேராசிரியர்களும் ஆசிரியர்களும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியாத கல்வி அமைச்சர் , கல்வி முறைமையை மறுசீரமைக்கவுள்ளதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13