(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏனைய கடன் வழங்குனர்களுடனான பொறிமுறை ஒன்றின் கீழ் பொது இணக்கப்பாட்டிற்கு வருவதில் சீனா இன்னும் இறுதி தீர்மானத்தை அறிவிக்க வில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவானது இலங்கையின் முன்னணி கடன் வழங்குனராக உள்ளது. சுமார் 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் சர்வதேச கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் ஏனைய பிரதான கடன் வழங்குனர்களாக இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றது. ஆனால் இந்த கூட்டணியில் இணைவதில் சீனா மறுத்து வருகின்றது.
அதே போன்று பாரிஸ் கிழப் ஊடான நடவடிக்கைளில் வெறும் கண்காணிப்பாளராகவே சீனா உள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அண்மைய சீன விஜயத்தின் போது இலங்கை தரப்பினரால் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ள போதிலும் கடன் மறுசீரமைப்புகள் குறித்து பேசாது, கடன் முகாமைத்துவம் என்ற அடிப்படையில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக்குழுவின் விஜயத்துடன் இடம்பெறவுள்ள முதலாவது மதிப்பாய்வு கூட்டத்தின் போது ஜூன் மாதம் இறுதி வரையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் செயல்திறன் குறித்து பரசீலிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து அக்குழுவினாலும் , சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டால் சுமார் 350 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கடந்த மார்ச் மாதம் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 2.9 பில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்க அங்கீகாரமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM