குடிபோதையில் வந்த சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்றுராஸில் இடம்பெற்றுள்து. 

ஒன்றுராஸ் தலைநகரான டெக்குசிகல்பாவிலுள்ள, அதிவேக நெடுஞ்சாலையில் குடிபேதையுடன் வேமாக வந்த லொறி சாரதி, பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ் மீது மோதியுள்ளார்.

குறித்த விபத்து நிகழ்ந்தப்போது பஸ்ஸில் மொத்தமாக 60 பேர் பயணித்துள்ளார்கள். விபத்து நடந்தவுடன் 14 பேர் இறந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பழங்களை ஏற்றிய நிலையில் மிகவும் வேகமாக வந்துள்ள குறித்த லொறியின் சாரதி, ஒரு வகை போதை பானத்தை அருந்தியிருந்ததால், லொறி கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை பஸ்மீது மோதியுள்ளது.   

மேலும் குறித்த விபத்தினால் 23 வயதான பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தப்பிச் செல்ல முயன்ற லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.

விபத்து நிகழ்ந்தப்போது குறித்த சாரதியிடமிருந்து ஒரு வகை போதை பானத்தின் மனம் வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.