திறக்கப்படும் புதிய மோதுகளம்

Published By: Vishnu

20 Aug, 2023 | 03:42 PM
image

ஹரி­கரன்

சீனாவின் சினோபெக் நிறு­வனம் வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி எரி­பொருள் விற்­ப­னையை இலங்­கையில் ஆரம்­பிக்­க­வுள்­ளது.

கடந்த மாதமே, சினோபெக் நிறு­வனம், இலங்­கையில் எரி­பொ­ருளை களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்கும் நட­வ­டிக்­கை­களை தொடங்கி விட்­டது.

எரி­பொருள் சந்­தையில், சுமார் 100 மில்­லியன் டொலரை முத­லீடு செய்யும் சினோபெக் நிறு­வ­னத்­துக்கு, ஏற்­க­னவே பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­திடம் உள்ள 150 எரி­பொருள் விற்­பனை நிலை­யங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

மேலும் 50 எரி­பொருள் விற்­பனை நிலை­யங்­களை புதி­தாக அமைப்­ப­தற்கும், அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இவற்றின் ஊடாக இலங்­கையின் எரி­பொருள் சந்­தையில் சில்­லறை விற்­ப­னையில் கால் வைக்கப் போகி­றது சீனா.

ஏற்­கெ­னவே உள்­நாட்டு எரி­பொருள் சந்­தையில் இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வனம் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது.

அதுவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் காலத்தில் தான் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டது.

2001 – 2004 காலப்­ப­கு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் பத­வியில் இருந்த போது, எரி­பொருள் சந்­தையில் இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்தை அனு­ம­திக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­துடன், திரு­கோ­ண­ம­லையில் உள்ள எண்ணெய் தாங்­கி­களும், 35 வருட குத்­த­கைக்கு ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது.

இலங்­கையில் 211 எரி­பொருள் விற்­பனை நிலை­யங்­களைக் கொண்­டி­ருக்­கி­றது லங்கா ஐ.ஓ.சி. நிறு­வனம்.

இப்­போது, இரண்­டா­வ­தாக இலங்­கையில் காலடி எடுத்து வைத்­தி­ருக்­கி­றது சீனாவின் சினோபெக்.

அவுஸ்­ரே­லி­யாவின் யுனைட்டெட் பெற்­றோ­லியம் மற்றும் அமெ­ரிக்­காவின் ஷெல் நிறு­வ­னத்­துடன் இணைந்த ஆர். எம் .பார்க் ஆகிய நிறு­வ­னங்­களும் உள்­நாட்டு எரி­பொருள் சந்­தையில் காலடி வைக்­க­வுள்­ளன.

இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வனம் ஒரு எரி­பொருள் விற்­பனை நிறு­வ­ன­மாக இலங்­கையில் காலடி வைத்­தி­ருந்­தாலும், அது ஒரு மூலோ­பாயத் திட்ட நட­வ­டிக்­கை­யா­கவே காணப்­பட்­டது.

திரு­கோ­ண­மலை துறை­முகம் மற்றும் எண்ணெய் தாங்­கி­களை வேறெந்த நாடும் கைப்­பற்றி விடக் கூடாது என்­பதில் இந்­தியா கவ­ன­மாக இருந்­தது.

1987 இந்­திய – இலங்கை உடன்­பாட்டின் மூலம், திரு­கோ­ண­மலை துறை­முகம் வெளி­யாரின் கைக்குச் செல்ல முடி­யா­த­படி கட்டுப் போட்­டது புது­டெல்லி.

அதற்குப் பின்னர், 2000ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் பலம்­வாய்ந்த இரா­ணுவக் கட்­ட­மைப்­பாக மாறி­யி­ருந்த போது, திரு­கோ­ண­ம­லையின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­னது.

இந்தச் சூழலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மிகத் தந்­தி­ர­மாக, இந்­தி­யா­விடம் எண்ணெய் தாங்­கி­களைக் குத்­த­கைக்கு கொடுத்தார்.

இதன் மூலம், விடு­தலைப் புலிகள் அவற்றின் மீது தாக்­குதல் தொடுக்க முடி­யாத நிலையை உரு­வாக்­கினார்.

அவற்றின் மீது கை வைத்தால், இந்­திய நலன்­களின் மீதான நட­வ­டிக்­கை­யாக அது கரு­தப்­படும் என்­பதால், 2006இல் திரு­கோ­ண­ம­லையில் தாக்­கு­தல்­களை நடத்­திய போது கூட, விடு­தலைப் புலிகள், சீனக்­குடா எண்ணெய் தாங்­கி­களை தவிர்க்க வேண்­டிய நிலை காணப்­பட்­டது.

இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் பாது­காப்பு மூலோ­பாய நட­வ­டிக்­கை­யா­கவே, லங்கா ஐ.ஓ.சி. நிறு­வனம், இலங்­கையின் எரி­பொருள் சந்­தையில் காலடி வைத்­தது.

இந்த நிறு­வனம் செயற்­படத் தொடங்­கிய காலத்தில் இருந்தே, கணி­ச­மான இலா­பத்­தையும் பெற்று வந்­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, இலங்கை அர­சாங்­கத்தின் பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­பனம் மோச­மான நிர்­வா­கத்­தினால், கடந்த காலங்­களில் பாரிய நட்­டத்தை சந்­தித்து வந்­தி­ருக்­கி­றது.

அண்­மையில் பாகிஸ்­தா­னுக்­கான தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்­தன, கடந்த பெப்­ர­வரி மாதம் தொடக்கம், பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார்.

அண்­மையில் அந்தப் பணியில் இருந்து அவர் விடு­விக்­கப்­பட்ட போது, நட்­டத்தில் இயங்கி வந்த பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­பனம், இந்த ஆண்டில், ஜூலை 28ஆம் திகதி வரை, 73 பில்­லியன் ரூபாவை இலா­ப­மாகப் பெற்­றி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்தார்.

இது கடந்த 5 தசாப்­தங்­களில் சாதனை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இன்று இலங்கை பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­பனம் மிகப்­பெ­ரிய வரு­மா­னத்தை ஈட்டும் நிறு­வ­ன­மாக மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம், அதிக விலைக்கு எரி­பொருள் விற்­கப்­ப­டு­வதும் ஒன்று.

இலங்கை பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­ப­னத்­துக்கே இந்த வரு­மானம் என்றால், லங்கா ஐ.ஓ.சி.யின் வரு­மானம் இன்னும் அதி­க­மாக இருப்­ப­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது கூட லங்கா ஐ.ஓ.சி. வரை­ய­றுக்­கப்­பட்ட அள­வி­லேயே செயற்­பட்­டது. லங்கா ஐ.ஓ.சி.­யினால் கூடுதல் எரி­பொருள் விநி­யோ­கத்தை மேற்­கொண்­டி­ருக்க முடியும்.

ஆனால் அது தனது எல்­லையைத் தாண்டி விநி­யோ­கத்தை விரி­வாக்­க­வில்லை.

அது­போ­லவே, எரி­பொருள் விலையை குறைத்து விற்­கவும், அர­சாங்கம் அனு­ம­திக்­க­வில்லை.

ஆனால், சீனாவின் சினோபெக் நிறு­வ­னத்­துக்கு அவ்­வா­றான எந்தக் கட்­டுப்­பா­டு­களும் இல்லை.

செப்­டெம்பர் 20ஆம் திகதி சினோபெக் நிறு­வனம் எரி­பொருள் விற்­ப­னையை ஆரம்­பிக்கும் என அறி­வித்த அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரான பந்­துல குண­வர்­தன, பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­ப­னத்தின் கட்­டுப்­பாட்டு விலைக்கு குறை­வா­கவும், எரி­பொ­ருளை விற்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

200 எரி­பொருள் விற்­பனை நிலை­யங்­களைக் கொண்­டி­ருக்கும் சினோபெக் குறைந்த விலையில் எரி­பொ­ருளை விற்கத் தொடங்கும் போது, வாக­னங்கள் அவற்றை முற்­று­கை­யிடும்.

அந்தக் கட்­டத்தில், லங்கா ஐ.ஓ.சி.நிறு­வ­னமும் போட்­டிக்கு விலைக்­கு­றைப்பை மேற்­கொள்ள வேண்­டிய கட்­டா­யத்­துக்கு தள்­ளப்­படும்.

ஏனென்றால் இப்­போது உள்­நாட்டு எரி­பொருள் சந்தை, இந்­தியா- –சீனா­வுக்கு இடை­யி­லான போட்­டி­யாக மாற்­றப்­ப­டு­கி­றது.

இந்தப் போட்டி ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருக்­குமா என்ற கேள்வி உள்­ளது.

ஏனென்றால், இந்­திய, சீன நிறு­வ­னங்கள் போட்டி போட்டு, விலை குறைப்பை மேற்­கொண்டால், பெற்­றோ­லியக்  கூட்­டுத்­தா­ப­னமும் விலைக்­கு­றைப்பை மேற்­கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் எரி­பொருள் விலையை கட்­டுப்­ப­டுத்தும் அதி­காரம் அர­சாங்­கத்­திடம் இல்­லாமல் போய் விடும்.

அவ்­வாறு விலைக்­கு­றைப்பை மேற்­கொள்­ளாது போனால், பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் விற்­பனை நிலை­யங்கள் சோபை­யி­ழக்கும்.அது அரச நிறு­வ­னத்தின் வரு­மா­னத்தை பாதிக்கும்.

போட்டி போட்­டாலும் சரி போட்டி போடா­விட்­டாலும் சரி, இழப்பு அர­சாங்­கத்­துக்குத் தான்.

அப்­ப­டி­யானால் எதற்­காக எரி­பொருள் சந்­தையில் வெளி­நாட்டு நிறு­வ­னங்­களை அர­சாங்கம் அனு­ம­தித்­தது?

இது பொரு­ளா­தார நெருக்­க­டிக்குப் பின்னர் எடுக்­கப்­பட்ட ஒரு முடிவு.

பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது, நாடு ஒரு கட்­டத்தில் முற்­றாக முடங்­கி­யது. அதற்குக் காரணம், எரி­பொருள் விநி­யோகம் முடங்­கி­யது தான்.

எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திடம் டொலர் இருக்­க­வில்லை. எண்ணெய் கப்­பல்கள், கொழும்பு துறை­மு­கத்­துக்கு அப்பால்  வா­ரக்­க­ணக்கில் கூட காத்­தி­ருந்­தன. ஆனால், நாடு இருளில் மூழ்கிக் கிடந்­தது.

டொலர் நெருக்­க­டி­யினால் ஒட்­டு­மொத்த நாடே செய­லி­ழந்­தது.

எரி­பொருள் இறக்­கு­ம­திக்­காக டொலரைப் புரட்ட முடி­யாத நிலை ஏற்­பட்­டதால், அதற்கு மாற்று உபா­ய­மா­கவே வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு கதவு திறக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் எரி­பொருள் சந்­தையில் கால் வைக்கும் போது பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் ஏக­போகம் பாதிக்­கப்­படும்.

சினோபெக் விநி­யோ­கத்தை தொடங்கும் வரை, எரி­பொருள் சந்­தையில் 80 வீத உரி­மையை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னமே கொண்­டி­ருந்­தது.

இதனால் ஏற்­படக் கூடிய பாதிப்பை,- இழப்பை அர­சாங்கம் எவ்­வாறு ஈடு செய்யும்?

அதற்கும் ஒரு வழி இருக்­கி­றது. சீன நிறு­வனம், 100 மில்­லியன் டொலர் முத­லீட்டை கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அடுத்து தொடர் விநி­யோ­கத்தில் ஈடு­படும் போது, உள்­நாட்டில் இருந்து, எரி­பொருள் கொள்­வ­ன­வுக்­காக முன்­கூட்­டியே டொலரை திரட்ட வேண்­டி­ய­தில்லை.

பிற்­கொ­டுப்­ப­ன­வா­கவே டொலரை மாற்றிக் கொடுக்க வேண்டும். அவ்­வாறு மத்­திய வங்கி அல்­லது வர்த்­தக வங்­கி­களின் ஊடாக டொலரை மாற்றி கொண்டு செல்லும் போது நாணய மாற்று வீத வரு­மா­னத்தை அர­சாங்கம் பெற்றுக் கொள்ளும்.

அதே­வேளை, அர­சாங்கம் எரி­பொருள் விலை­களை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது என்ற குற்­றச்­சாட்டை சுமக்கும் நிலை வராது. சீனாவோ, இந்­தி­யாவோ சர்­வ­தேச சந்தை நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப விலை­களை தீர்­மா­னிக்கும். அந்தப் போட்­டியின் சாத­கங்­களை நுகர்­வோ­ருக்கு பெற்றுக் கொடுக்­கவும் முடியும்.

சினோபெக் எரி­பொருள் விற்­ப­னையை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் பந்­துல குண­வர்­தன இன்­னொரு முக்­கிய அறி­விப்­பையும் வெளி­யிட்டார்.

2019 நவம்­பரில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் சிங்­கப்பூர் நிறு­வனம் ஒன்­றுடன் செய்து கொண்ட உடன்­பாட்டு இப்­போது ரத்துச் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

அம்­பாந்­தோட்­டையில் நாளொன்­றுக்கு 42 ஆயிரம் பீப்பாய் எரி­பொ­ருளை சுத்­தி­க­ரித்து, ஏற்­று­மதி செய்யும் 4 பில்­லியன் டொலர் திட்­டத்­துக்கு, 1200 ஏக்கர் காணி­களை வழங்கும் ஒப்­பந்­தமே ரத்துச் செய்­யப்­பட்­டது.

இலங்­கையின் மிகப்­பெ­ரிய முத­லீட்டுத் திட்­ட­மாக அது அப்­போது கொண்­டா­டப்­பட்­டது.

குறித்த திட்டம் தொடர்­பாக அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்தம் செய்து கொண்ட சிங்­கப்பூர் நிறு­வனம், நிலத்தை பொறுப்­பேற்­க­வு­மில்லை, திட்­டத்தை செயற்­ப­டுத்த தொடங்­க­வு­மில்லை.

கோட்­டா­பய ராஜபக்ஷ பத­விக்கு வந்த பின்னர், இந்­திய, ஜப்­பா­னிய முத­லீட்டுத் திட்டங்களில் கைவைத்ததாலும், அதற்குப் பின்னரான ஆரோக்கியமற்ற பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளாலும் சிங்கப்பூர் நிறுவனம் அந்த முதலீட்டைத் தொடருவதில் அக்கறையின்றி இருந்திருக்கலாம்.

இப்போது அரசாங்கம் அந்த திட்டத்தை ரத்துச் செய்திருக்கிறது, இது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முக்கியமான தோல்விகளில் ஒன்று.

சீனாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொள்ளும் போது, அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதற்காகவே சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மீளப் பெறப்பட்டதா என்ற கேள்விகளும் உள்ளன.

எவ்வாறாயினும், ஒரு பக்கத்தில் திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக்க இந்தியா முயற்சிக்கின்ற நிலையில் அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் சீனாவுக்கான கதவுகளை திறக்கிறது.

இது பிராந்தியத்தில் போட்டியை ஏற்படுத்துமா? பூசல்களை விரிவுபடுத்துமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை...

2024-05-28 16:14:08
news-image

8 தடவை இடம்பெயர்ந்துள்ளோம் எத்தனை காலத்திற்கு...

2024-05-28 11:49:28
news-image

"ஒபறேசன் சஜப " ; பச்சைக்கட்சியை...

2024-05-28 10:50:31
news-image

விமானங்களில் ஏற்படும் திகில் அனுபவம் !...

2024-05-28 10:33:20
news-image

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காக ஏங்கும்...

2024-05-27 16:39:16
news-image

ஒப்பந்த முறை கொடுப்பனவுகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட தோட்டத்...

2024-05-27 11:22:09
news-image

ஜனாதிபதித் தேர்தலும் மலையக மக்களும்..!

2024-05-27 14:16:32
news-image

ஈரான் ஜனாதிபதியின் மரணத்திற்கு யார் காரணம்?

2024-05-26 18:57:01
news-image

அஷ்ரப் அருங்காட்சியகமும் வாயால் சுட்ட வடைகளும்

2024-05-26 18:54:31
news-image

ஸ்லோவாக்கிய பிரதமர் கொலை முயற்சியும் மேற்குலகின்...

2024-05-26 18:53:55
news-image

நுணலும் தன் வாயால் கெடும்

2024-05-26 18:10:34
news-image

ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் பொன்சேக்கா…?

2024-05-26 18:02:15