விஜய் கனிஷ்கா நடித்திருக்கும் 'ஹிட் லிஸ்ட்' பட டீசரை வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி

19 Aug, 2023 | 05:11 PM
image

இயக்குநர் விக்ரமனின் மகனும், நடிகருமான விஜய் கனிஷ்கா கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.

இரட்டை இயக்குநர்கள் சூரியக்கதிர் மற்றும் கே. கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'ஹிட் லிஸ்ட்'. இதில் விஜய் கனிஷ்கா, கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஸ்காந்த், சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநட்சத்திரா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா, அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர். கே.  செல்லுலாய்ட்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே இயக்குநர் விக்கிரமனின் வாரிசு விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாவதாலும், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் தயாரித்திருப்பதாலும், எக்சன் திரைப்படமாக உருவாகி இருப்பதாலும், 'ஹிட் லிஸ்ட்' படத்திற்கு  திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம் பி...

2026-04-16 15:49:37
news-image

நடிகர் பிரஜின் நடிக்கும் 'எக்ஸ் வை...

2026-04-16 15:52:07
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த லவ்...

2026-04-16 15:30:20
news-image

நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட்...

2026-04-16 15:29:30
news-image

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'பவர்...

2026-04-16 15:08:28
news-image

கங்கை அமரன் நடிக்கும் 'லெனின் பாண்டியன்'...

2026-04-15 18:46:11
news-image

நடிகை தீபா சங்கர் நடிக்கும் 'தமிழினி'...

2026-04-15 18:44:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய...

2026-04-15 18:38:33
news-image

சூர்யா நடிக்கும் 'கருப்பு' படத்தின் அப்டேட்

2026-04-15 18:36:30
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி -...

2026-04-14 14:42:04
news-image

போதை பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வை...

2026-04-14 14:36:14
news-image

ஜனநாயகன்' படக்குழு கடும் எச்சரிக்கை

2026-04-13 17:42:36