வீசிங் எனப்படும் மூச்சு திணறல் பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

19 Aug, 2023 | 05:05 PM
image

இன்றைய சூழ்நிலையில்  பிறந்து ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலானவர்களுக்கு வீசிங் எனப்படும் மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாம் மூச்சு விடும் போது எம்முடைய சுவாச குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் பிரத்யேக ஒலிக்குறிப்புடன்  மூச்சுக்காற்று வெளியேறும். இந்த ஒலிக்குறிப்பை தான் மருத்துவ மொழியில் வீசிங் என்றும், ஒரு வகையினதான மூச்சு திணறல் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது ஒரு நோய் அல்ல. ஆனால் ஒஸ்துமா எனப்படும் நோயின் அறிகுறியாக அவதானிக்கப்படுகிறது. மேலும் சுவாச குழாய்களில் ஏற்படும் தசை சுருக்கம், அடைப்பு, சுவாசிப்பதில் சமசீரற்ற தன்மை, சுவாசிக்கும் போது இரைச்சல் ஏற்படுவது, மார்பு இறுக்கம், இரவு நேர இருமல், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு வீசிங் எனப்படும் மூச்சு திணறல் பாதிப்பு இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

மூச்சுக்குழாய் பகுதிகளில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று, ஒஸ்துமா, ஒவ்வாமை, பருவ கால மாற்றம், மூச்சு நுண்குழாய் அழற்சி, புகை பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

எக்ஸ்ரே பரிசோதனை, நுரையீரல் இயங்கு திறன் பரிசோதனை, ரத்த பரிசோதனை, வியர்வை பரிசோதனை, நுண்ணுயிர் கோழை பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இதற்கு வாய் வழியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறையில் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றின் மூலமும் இதற்கான முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. மூச்சு திணறலை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அதனை தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். குறிப்பாக ஒவ்வாமை மற்றும் புகைப்பிடித்தலை முற்றாக தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். சிலருக்கு விற்றமின் டி குறைபாட்டின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். இவர்களுக்கு மருத்துவர்கள் பிரத்யேக சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.

டொக்டர் ஆர்த்தி 

தொகுப்பு அனுஷா

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12