இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த அலுமாரியினை உடைத்து சுமார்  3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பம் தொடர்பில் 44 வயதான தினேஸ் தீபத் மெண்டிஸ் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

4 மோதிரங்கள், 3 தங்க கையணி, ஒரு தங்கச் சங்கிலி மற்றும் 5 ஆயிரம் ரூபா பணம் என்பவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.