இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலிய அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸிற்கு காலில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடருக்கு உபுல் தரங்க தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.