வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் உயிரிழப்பு

18 Aug, 2023 | 01:12 PM
image

வவுனியா நவகமுவ பகுதியில் இடம்பெ்றற வாகன விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் இரட்டைபெரிய குளம் பகுதியைச் சேர்ந்த  58 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரட்டைப்பெரியகுளத்திலிருந்து வவுனியா நோக்கி குறித்த வர்த்தகர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், அதே திசையில் இருந்து பயணித்த லொறி ஒன்று வர்த்தகர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி  விபத்துக்குள்ளானது.

லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20
news-image

இலங்கை மிகப்பெரும் அரசியல் சர்வதேச அரசியல்...

2024-02-23 17:45:30