பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை

18 Aug, 2023 | 01:55 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் நிலவும் வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 50 வீதமான நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

தற்போது நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை  ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையற்ற விடங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

லபகமுவ மற்றும் கரட்டுவாவ ஆகிய நீர்நிலைகளிலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது.

அதனை எம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும். பியகம மற்றும் அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் மட்டத்தை தேவையான மட்டத்தில் பேண முடிந்தால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு தேவையான நீர் விநியோகத்தை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக சபைக்கு சொந்தமான 344 நீர் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகிறது. மொத்த நீர் கொள்ளவுகள் நிலையங்கள் 267 காணப்படுகிறது.

இவற்றின் மொத்த குடிநீர் உற்பத்தி 2.63 கன மில்லியன் லீட்டர்களாகும். தற்போது  42  உற்பத்தி நிலையங்களில் நீர்மட்ட கொள்ளளவு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட நீரின் கொள்ளளவு 9 வீதத்தால் குறைவடைந்துள்ளது.வரட்சியின் காரணமாக

நாட்டில்  54 ஆயிரத்து 580 நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலத்தில் 58 ஆயிரத்து 866 நீர்நிலைகள் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் எமக்கு தேவையான அளவு நீரை விநியோகம் செய்ய முடியாமையால் குறிப்பிட்ட சில நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை நேர அடிப்படையிலேயே விநியோகிக்கிறோம்.

நீர்மட்டங்களின் அளவுக்கு ஏற்ப மணித்தியாலங்களையும் குறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 

நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29