பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தினால் அரசாங்கம் பலவீனமடையும் - ரோஹித அபேகுணவர்தன

18 Aug, 2023 | 09:59 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி முயற்சித்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரை ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் அரசியல் காய் நகர்த்தல் ஒன்று இடம்பெறுவதை நன்கு அறிவோம்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் புதிய அரசியல் கூட்டணி அமைப்பதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கி ஹெலிகொப்டர் சின்னத்தில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி காலவோட்டத்தில் காணாமலாக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி முயற்சித்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தான் இன்றும் செயற்படுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம். ஆகவே அவர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர் கூட்டத்தின் போது இவ்விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00