நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸை நொக் அவுட் செய்தது பி லவ் கண்டி 2 ஆவது தகுதிகாணில் கோல் டைட்டன்ஸை சந்திக்கிறது

18 Aug, 2023 | 07:21 AM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டின் முதல் மூன்று அத்தியாயங்களில் தொடர்ச்சியாக சம்பியனான ஜெவ்னா கிங்ஸ், நான்காவது அத்தியாயத்தில் பி லவ் கண்டி அணியினால் நொக் அவட் செய்யப்பட்டது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற நீக்கல் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸை 61 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பி லவ் கண்டி அணி, சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

வனிந்து ஹசரங்கவின் சாதனைமிகு 6 விக்கெட் குவியல் ஜெவ்னா கிங்ஸை போட்டியிலிருந்து வெளியேறச்செய்தது.

வனிந்து ஹசரங்க 3.2 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் லங்கா பிறீமியர் லீக் வரலாற்றில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

இதற்கு முன்னர் 2021இல் ஜெவ்றி வெண்டர்சாய் பதிவு செய்த 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களே அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது.

மேலும் இந்த வருடம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க இதுவரை மொத்தமாக 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நீக்கல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பி லவ் கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைக் குவித்தது.

மொஹமத் ஹரிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஏற்படுத்திய இணைப்பாட்டம் மொத்த எண்ணிக்கைக்கு உரமிட்டது.

அதிரடி ஆரம்ப வீரர் பக்கார் ஸமான் முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தமை பி லவ் கண்டி அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், மொஹமத் ஹரிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

தினேஷ் சந்திமால் 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ்  உட்பட 41 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 11 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (91 - 3 விக்.)

அதனைத் தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் கமிந்து மெண்டிஸுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த மொஹமத் ஹரிஸ், 5 ஆவது விக்கெட்டில் மேலும் 30 ஓட்டங்களை அசிப் அலியுடன் பகிர்ந்தார்.

கமிந்து மெண்டிஸ் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஹரிஸ் 49 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களை விளாசினார்.

அசிப் அலி 15 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

பந்துவீச்சில் நுவன் துஷார 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேல குணரட்ன 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 17.2 ஓவர்களில்  இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 7 ஓவர்களுக்குள் சரித் அசலன்க (1), ரஹ்மானுல்லா குர்பாஸ் (19), துனித் வெல்லாலகே (3), கிறிஸ் லின் (19) ஆகிய நால்வரின் விக்கெட்களை இழந்ததால் ஜெவ்னா கிங்ஸ் திக்குமுக்காடிப் போனது. (49 - 4 விக்)

மூத்த வீரர் ஷொயெப் மாலிக், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டேவிட் மில்லரின் விக்கெட்டைக் கைப்பற்றிய வனிந்து ஹசரங்க போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். மில்லர் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

அசேல குணரட்ன, அணித் தலைவர் திசர பெரேரா ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கத்தில் தனித்து போராடிய ஷொயெப் மாலிக் 31 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மிக மோசமான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார். மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஹசரங்கவின் 6 விக்கெட்களை விட சஹான் ஆரச்சிகே, நுவன் ப்ரதீப், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குமார் தர்மசேனாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட்...

2026-03-16 16:04:49
news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49