(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் பாங்கொங்கில் அமைந்துள்ள நிமிபுத்ர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 8 நாடுகளுக்கு இடையிலான FIBA மகளிர் ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை கடைசி இடத்தைப் பெற்றது.
பி குழுவில் இடம்பெற்ற இலங்கை லீக் சுற்றில் கஸக்ஸ்தான் (34 - 66), ஜோர்தான் (41- 82), தாய்லாந்து (36 - 101) ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து அணிகளை நிரல்படுத்தும் 7ஆம், 8ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் மொங்கோலியாவை இன்று வியாழக்கிழமை (17) எதிர்த்தாடிய இலங்கை அப் போட்டியிலும் 41 - 80 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்து கடைசி இடத்தை அடைந்தது.
இலங்கைக்கும் மொங்கோலியாவுக்கும் இடையிலான போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் 17 - 7 என்ற புள்ளிகள் அடிப்படையில் மொங்கோலியா முன்னிலை அடைந்தது.
தொடர்ந்து 2ஆவது ஆட்ட நேர பகுதியிலும் திறமையாக விளையாடிய மொங்கோலியா அப் பகுதியையும் 23 - 14 என தனதாக்கி இடைவேளையின்போது 40 - 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் மிக வேகமாக விளையாடிய மொங்கோலியா 3ஆவது ஆட்ட நேர பகுதியில் 32 புள்ளிகளைக் குவித்ததுடன் இலங்கையினால் 11 புள்ளிகளையே பெற முடிந்தது.
கடைசி ஆட்ட நேர பகுதியை 9 - 8 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை தனதாக்கியபோதிலும் ஒட்டுமொத்த நிலையில் 80 - 41 என்ற புள்ளிகள் அடிப்படையில் மொங்கோலியா வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM