உடலுக்கு தீமை செய்யாத கட்டி! 

17 Aug, 2023 | 05:13 PM
image

எம்முடைய உடலில் ஏற்படும் தீங்கற்ற கட்டி வகைகளில் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கும் கட்டி ஒஸ்டியோட் ஒஸ்டியோமா (Osteoid Osteoma). 5 வயது முதல் 30 வயது வரையில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படும் பாதிப்புகளில் ஒஸ்டியோட் ஒஸ்டியோமா என்பதும் ஒன்று. இதற்கு தற்போது ஆர்.எஃப். அப்ளேசன் எனப்படும் ரேடியோ அதிர்வலை மூலமான சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒஸ்டியோட் ஒஸ்டியோமா என்பது புற்றுநோய் பாதிப்பற்ற, தீங்கு விளைவிக்காத, சிறிய அளவிலான கட்டியாகும். இந்த கட்டி எலும்பில் வளரும். மேலும், எம்முடைய தொடை எலும்பு, முதுகெலும்பின் கீழ் பகுதி, கை எலும்பின் பகுதி ஆகியவற்றில் இத்தகைய கட்டிகள் வளரக்கூடும்.

சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து, எலும்பு மற்றும் பிற திசுக்களின் பகுதியில் ஒன்றிணைந்து வளரும்போது இத்தகைய ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனப்படும் கட்டி உருவாகிறது. இது வளரும் தன்மையுள்ளது. இது ஆரோக்கியமான எலும்பு திசுக்களை அசாதாரணமான கடினமிக்க எலும்பு திசுக்களாக மாற்றுகிறது. இதற்கான காரணம் துல்லியமாக இதுவரை அவதானிக்கப்படவில்லை. என்றாலும், இதற்கான சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

சிலருக்கு இத்தகைய கட்டி எந்த பகுதியில் இருக்கிறதோ அந்த பகுதியில் இரவு நேரத்தில் வலி ஏற்படக்கூடும். சிலருக்கு அவ்விடத்தில் வீக்கம் ஏற்படலாம். அப்பகுதியில் தசை இறுக்கம், நரம்பியல் செயற்பாட்டில் சீரற்ற தன்மை ஏற்பட்டு, அதனால் வலி போன்றவை உருவாகக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

ஆர்.எஃப். அப்ளேசன் எனப்படும் ரேடியோ ஃப்ரீக்குவன்சி அப்ளேஷன் சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதன் போது அந்த குறிப்பிட்ட கட்டியை எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்த பிறகு, அதன் மீது மெல்லிய ஊசியினை செலுத்தி, அதனூடாக ரேடியோ அதிர்வலைகளை உட்செலுத்துகிறார்கள். இதன் காரணமாக அந்த கட்டியை அகற்றுகிறார்கள்.

ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் பாதிப்பு மட்டுமல்லாமல், உடலில் வலி எங்கு ஏற்பட்டாலும் அதற்கான முழுமையான நிவாரணம் பெறவும் இத்தகைய சிகிச்சையை பயன்படுத்தலாம். 

மேலும், தற்போது முதுமை அடைந்தவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவை தொடக்க நிலையில் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சத்திர சிகிச்சை அளிக்க இயலாத அளவுக்கு அவர்களின் உடலில் வேறு இணை நோய்கள் இருந்தால், அவர்களுக்கும் அத்தகைய தருணங்களில் இத்தகைய ஆர்.எஃப். அப்ளேசன் சிகிச்சையை பயன்படுத்தி முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

டொக்டர் : சத்ய நாராயணன்

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12