மன்னாரில் ஹெரோயின் போதை பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Published By: Digital Desk 3

17 Aug, 2023 | 05:25 PM
image

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை(16) மாலை மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மூர்வீதி புதிய தெரு பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் போல் கிளிண்டன் மார்க் (வயது-28) என்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் நேற்று புதன்கிழமை (16) மாலை மன்னார் பெரிய கடை பகுதியில் உள்ள மது விற்பனை நிலைய பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடமையில் இருந்து 100 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த நபரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27