பாராளுமன்ற குழு அறை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது – பாராளுமன்ற செயலாளர் நாயகம்

Published By: Digital Desk 3

17 Aug, 2023 | 04:34 PM
image

(நமது நிருபர்)

பாராளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற வீடு பராமரிப்புப் பிரிவு தொடர்பில் 2023 ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த திகதிகளில் வெளியிடப்பட்ட ஊடக செய்திகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இக்குழு தற்பொழுது விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பணியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் பாராளுமன்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி அல்லது தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விடயங்களைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது உதவிச் செயலாளர் நாயகத்தைச் சந்தித்து தகவல்களை முன்வைக்க முடியும் என உள்ளக சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்தக் குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற நிலையில் இடம்பெற்று வருவதாகவும் ஏதாவதொரு அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34