வேட்டைக்காரர்களுக்கு உத்தியோகபூர்வ துப்பாக்கியைக் கொடுத்து விட்டு காவல் குடிசையில் உறங்கிய சார்ஜன்ட்

Published By: Digital Desk 3

17 Aug, 2023 | 01:20 PM
image

இஸ்ஸனெவ வனப் பகுதியில் இரவு  நேரத்தில்  வேட்டையாடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மேலும் இருவர் நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின்  கடமைக்குரிய T -56   துப்பாக்கியும்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மொரவெவ பொலிஸின்  கீழ் உள்ள ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவராவார்.  மற்றைய இரு சந்தேகநபர்களும் வஹல்கட பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.  இவர்களில் ஒருவர் பயணிகள் போக்குவரத்து நேரக் கண்காணிப்பாளராக உள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட், இஸ்ஸனெவ பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை காவல் காத்துக்  கொண்டிருந்த ஏனைய இரு சந்தேக நபர்களை சந்தித்து,  மிருகங்களை வேட்டையாடுவதற்காக தனது கடமை ஆயுதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு,  காவல் குடிசையில் உறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39