கொழும்பில் அண்மையில் வைத்தியபீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ராகம மருத்துவ பீட மாணவர்கள், ராகம வைத்தியசாலைக்கு முன்னாலும், பேராதனை மருத்துவ பீட மாணவர்கள் கலஹா சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதில் அம் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் அந்த மருத்துவ பீடத்திற்கு அருகில் இருந்து பேரணியாக லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றுள்ளனர்.