நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை : தேசிய கொள்கை அவசியம் என்கிறது ஐக்கிய தேசிய கட்சி

Published By: Vishnu

16 Aug, 2023 | 07:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்.)

 

நீர் மற்றும் மின்சாரம் தொடர்பில் தேசிய கொள்கை தேவை. தேசிய கொள்கை இல்லாமையே நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்பட்டு வருகிறது  என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீ, மற்றும் மின் கட்டண அதிகரிப்பு உடனடியாக தீர்க்க முடியுமான பிரச்சிளை அல்ல. உலக நாடுகளைப்போன்று இலங்கையிலும் நீர் மற்றும் மின்சாரத்துக்கு தேசிய கொள்கை அமைக்கப்பட வேண்டும். தேசிய கொள்கை இல்லாமையே இந்த இரண்டு முக்கிய துறைகளும் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணமாகும். 

குறிப்பாக இலங்கையில் ஏனைய நாடுகளில் இருப்பதுபோல், குடி நீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நீர் தொடர்பில் தேசிய கொள்கை இருக்கவேண்டும். ஆனால் இன்று குடி நீர் தொடர்பில் நாங்கள் பின்பற்றிவருவது சிறுபிள்ளைத்தனமான முறைமையாகும்.

உதாரணமாக தெரிவிப்பதாக இருந்தால், குடிநீர் ஒரு லீட்டரை சுத்திகரித்து எடுப்பதற்கு 25ரூபா செலவிடப்படுவதாக இருந்தால், அதில்தான் நாட்டில் இருக்கும் மிருங்களை குளிப்பாட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்றே எமது வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதும் இந்த குடி நீரையாகும்.

ஆனால் உலக நாடுகள் குடிநீருக்கு பிரத்தியேகமான வழியை ஏற்படுத்தி இருக்கின்றன. உலக நாடுகளில் அங்கு வீடுகளுக்கு குடிநீருக்கு தனியான குழாய் வழியை ஏற்படுத்தி கொடுத்திருப்பது போன்று வேறு தேவைகளுக்காக தனியான நீர் குழாய் வழியொன்றை வழங்கி இருக்கிறது.

அதனால் இலங்கையில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது 2கோடி மக்களுக்கு மாத்திரமல்ல சுமார் 20 கோடிக்கும் அதிக பேருக்கு நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. மக்களுக்கு குடிக்கவும் நீர்தேவை அதேநேரம் விவசாயம், கட்டுமான தேவை போன்ற ஏனைய அனைத்து தேவைகளுக்கும் இந்த நீரையே வழங்க வேண்டி இருக்கிறது. அதனால் இந்த விடயத்தில் நாங்கள் தோல்வியுற்ற தேசமாகும்.

எனவே இரண்டு வழி நீர் விநியோக நடவடிக்கை மேற்கொள்வதுடன் குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் என தேசிய கொள்கை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே இந்த துறைகளை வளர்ச்சியடையச் செய்ய முடியும். தற்போது மக்கள் எதிர்கொண்டுவரும் நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பு பிரச்சினைக்கான தீர்வை காண முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54