பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

Published By: Ponmalar

16 Aug, 2023 | 05:32 PM
image

எம்மில் பெரும்பாலானவருக்கு பல்வேறு காரணங்களால் பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாத பாதிப்புக்குரிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மேற்பட்டவை தோன்றினால்.. 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் காப்பாற்றுவதற்குரிய மதிப்புமிகு நேரத்திற்குள்... அதாவது அறிகுறி தோன்றிய தருணத்திலிருந்து நாலரை மணி தியாலத்திற்குள் அருகில் உள்ள பன்னோக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றால்.. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சிகிச்சையின் மூலம் பக்கவாத பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் அளிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய இதயத்திலிருந்து கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் ரத்த குழாய் வழியாக மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால்...இதன் காரணமாக அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவர்கள் இதற்கான பிரத்யேக பரிசோதனை மூலம் இதனை துல்லியமாக அவதானிப்பர்.

அதனைத் தொடர்ந்து கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் கரோடிட் எனப்படும் தமனி பகுதியில் எழுபது சதவீதத்திற்கு மேல் கொழுப்பு படிவங்கள் உருவாகி, அடைப்பு ஏற்பட்டிருந்தால்... அதனை கரோடிட் எண்டார்டெக்ரோடோமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கலாம். ஏனெனில் இந்த தமனி வழியாக செல்லும் ரத்தவோட்டம் அங்கு உருவாகி இருக்கும் கொழுப்பு படிவங்களால் தடை ஏற்படுவதால், மூளை பகுதிக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாத நோய் ஏற்படுகிறது.

இத்தகைய நவீன சத்திர சிகிச்சையின் போது கரோடிட் தமனி பகுதியில் ஏற்பட்டிருக்கும் கொழுப்பு படிவங்கள் அகற்றப்பட்டு, அங்கு ரத்தவோட்டம் சீர்படுத்தப்படுகிறது. இதனால் பக்கவாத பாதிப்பினால் ஏற்படும் விளைவுகள் பாரிய அளவில் குறைக்கப்படுகின்றன.

இத்தகைய சத்திர சிகிச்சையை பரிந்துரைப்பதற்கு முன்னர்.. பக்கவாத பாதிப்பிற்கு கரோடிட் தமணியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு தான் காரணம் என்பதனை மருத்துவ நிபுணர்கள் பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்து உறுதிப்படுத்திக் கொள்வர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அப்பகுதியில் ஒஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சையை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா...? அல்லது கரோடிட் ஸ்டென்ட்டிங் எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா...? என்பதனை அவதானிப்பர். இவ்விரு சத்திர சிகிச்சைகளை விட கரோடிட் என்டார்டெக்ரோடோமி எனும் சத்திர சிகிச்சை மேற்கொண்டால்தான் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என அவதானித்த பிறகு அத்தகையச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது எம்முடைய கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் கரோடிட் தமனி பகுதியில் சிறிய அளவிலான கீறலை ஏற்படுத்தி அங்கு உள்ள கொழுப்பு படிவங்களை அகற்றி மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை சீரமைப்பர். அதன் பிறகு பிரத்தியேக இணைப்பின் மூலம் தமனி பகுதியை சீரமைப்பர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அறிவுரையை உறுதியாக பின்பற்றினால் பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் வெங்கட்ராமன்,
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30