கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் பாரிய வேலை­நி­றுத்த போராட்­ட­ங்கள் 

Published By: MD.Lucias

04 Jan, 2016 | 09:26 AM
image

மலர்ந்­துள்ள 2016 ஆம் ஆண்டு வேலை நிறுத்­தங்கள் இல்­லாத ஆண்­டாக அமைய வேண்­டு­மாயின் தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யி­னரின் சகல கோரிக்­கை­க­ளுக்கும் நியா­ய­மான தீர்வு கிடைக்க வேண்­டும்­மென தனியார் போக்­கு­வ­ரத்து உரி­மை­யாளர் சங்­கத்தின் தலைவர் கெமுனு விஜே­ரத்ன தெரி­வித்தார்.

இந்த ஆண்­டிலும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கா­விட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக பாரிய வேலை­நி­றுத்த போராட்­டங்கள் வெடிக்­கு­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு சன சமூக நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் தனியார் போக்­கு­வரத்து துறை­யி­ன­ருக்கு சரி­யான கால அட்­ட­வணை ஒன்று தயா­ரித்­துக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமக்­கான சரி­யான கால அட்­ட­வணை தயா­ரித்துத் தரப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார்.

அதற்­கி­ணங்க நூறு நாள் அர­சாங்­கத்தின் போது நாம் பஸ் கட்­ட­ணத்­தையும் குறைத்து மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கி­யி­ருந்­த­மையும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வெற்­றிக்கு பிர­தான கார­ண­மா­னது.

ஆனால் தற்­போது எமது கோரிக்­கை­க­ளுக்கு புறம்­பா­கவே நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் போக்­கு­வ­ரத்து துறையில் அர­சியல் தலை­யீ­டு­களும் ஊழலும் நிறைந்து காணப்­ப­டு­வ­தாக தொடர்ந்து மஹிந்த அர­சாங்­கத்தை குற்றம் சாட்­டி­வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் அத­னையே செய்­கின்­றது.

மேல்­மா­காண சபையின் போக்­கு­வ­ரத்து அமைச்­சரின் மகன் 7000 பஸ்கள் உள்ள மேல்­மா­காண சபை போக்­கு­வ­ரத்து துறைக்கு தலை­வ­ரா­கவும், 3000 பஸ்­களை கொண்­டுள்ள மத்­திய மாகாண சபைக்கு மத்­திய மாகாண சபையின் போக்­கு­வ­ரத்து அமைச்­சரின் மகனும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.இந்­நி­லையில் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கும் போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவின் உற­வினர் ஒரு­வரே நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அதேபோல் இன்றும் அரச போக்­கு­வ­ரத்து துறையில் ஊழல் நிறைந்­தி­ருப்­பதை அரசாங்­கத்­தினால் மறைக்க முடி­யாது. இந்த ஊழல் செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் மஹிந்­தவின் சகாக்கள் என்­ப­தையும் அர­சாங்கத்­தினால் மறுப்­ப­தற்­கில்லை.

எனவே இவர்­கள் தொடர்ந்­தும் தக்க வைத்­துக்­கொண்­டுள்ள ரணில் மைத்திரி அர­சாங்­கத்தை எவ்­வாறு நல்­லாட்சி அர­சாங்கம் என குறிப்­பிட முடியும் என்­பது எமக்கு கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

கடந்த காலங்­களில் ஜனா­தி­ப­தியால் எமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு குறிப்­பிட்டு மேல்­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கப்பட்ட கடி­தத்தை அவர் கிழித்­தெ­றிந்­து­விட்டார். இதனை நல்­லாட்­சி­யாக எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது.

எனவே எம்­மு­டன் சுமு­க­மான முறையில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி எமக்கு நியா­ய­மான தீர்வை பெற்­றுத்­தர வேண்­டிய பொறுப்பு சுதந்­திர கட்­சி­யையே சார்ந்­துள்­ளது ஏனெனில் சுதந்திர கட்சியே போக்குவரத்து அமைச்சை தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றது.

அதனால் எதிர்காலத்திலும் எமக்கான பதில்

தரப்படாவிட்டால் சுதந்திரக்கட்சியின் தலை வரான ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும்.

அதனிடையே அவருக்கு 2016 ஆம் ஆண்டை வேலை நிறுத்தங்கள் இல்லாத ஆண்டாக பாதுகாப்பதற்கும் முடியாது போகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02