சோதிட இணையதளங்களுக்கு எம்மில் பலரும் நேரத்தை ஒதுக்கி ஏதேனும் அபூர்வ தகவல்கள் வெளியாகிறதா? என பார்வையிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக தன வரவு குறித்த எந்த காணொளி அல்லது கட்டுரை வெளியானாலும் அது தொடர்பான விடயங்களை முழுவதுமாக தெரிந்து கொண்டு அதனை பின்பற்றி தங்களது தன வரவை அதிகரித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தனத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தங்களுடைய வீடுகளில் நிரந்தரமாக தங்க வைப்பதற்கான ஆன்மீக குறிப்புகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான ஓர் எளிய குறிப்பினை இங்கே பதிவு செய்கிறோம்.
எம்மில் அனைவருக்கும் வெவ்வேறு அளவுகளில் பண தேவை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. உழைப்பினால் ஈட்டும் வருவாய் என்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் வேறு ஏதேனும் வழிகளில் தன வரவு கிடைக்காதா..! என ஏங்குகிறார்கள். அவர்கள் இந்த விடயத்தை பின்பற்றினால் செல்வ வளம் பெருகுவதுடன்... செலவழித்தாலும் கிடைக்காத நிம்மதியும் கிடைக்கும்.
அதுதான் வெட்டி வேர். இந்த வேர் எம்முடைய வீடுகளில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். ஏனெனில் இந்த வெட்டிவேர் வாசம்... மகா லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். இந்த வேர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி மனதிற்கு பிடித்து தங்கி அருள் புரிவார்.
அருகிலிருக்கும் நாட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த வெட்டிவேரை வாங்கி வந்து எம்முடைய வீடுகளில் வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக எம்முடைய பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி கோப்பையில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு எலுமிச்சம் பழத்தையும் இந்த வேரின் சிறிதளவினையும் வைத்து விட வேண்டும். வீடு முழுவதும் பரவும் இந்த வாசம்... மகாலட்சுமியையே மயக்கி எம்முடைய வீடுகளில் வரவழைத்து விடும். மேலும் இந்த வாசம் நேர்நிலையான அதிர்வலைகளை பரவச் செய்வதால்.. வீடுகளில் மங்கலமும், மங்களத்தன்மையும் அதிகரிக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை இந்த தண்ணீரையும் எலுமிச்ச பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வெட்டிவேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை என்பதால் அதனை மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலும் பலன் தரும்.
மேலும் வெட்டிவேரின் வாசம் வீடுகளில் பரவி இருப்பதால் எந்த துரதிர்ஷ்டமும் அல்லது எந்த எதிர் நிலையான ஆற்றலும் நெருங்க இயலாது. உங்களுக்கு யாரேனும் செய்வினை செய்து இருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தால்.. சிறிதளவு வெட்டி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு முன்புற வாயிலின் மேல்பகுதியில் வைத்தால் போதும். எந்த ஒரு துர் சக்தியும் வீட்டுக்குள் நுழையாது.
இந்த வெட்டிவேரை சிறிதளவு வெட்டி எடுத்துக்கொண்டு அதனை வெயிலில் நன்றாக உலர வைத்து பின்பு அதனை பொடியாக்கி போத்தலில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு வேப்பங்கொழுந்தையும் நன்றாக உலர வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். பிறகு இந்த பொடியை நெற்றியில் அணியும் திருநீறுடன் இணைந்து ..குழைத்து.. கலந்து அணிந்தால்.. நன்மை பயக்கும். நீங்கள் இதனை நெற்றியில் அணிந்து கொண்டு செல்லும் அனைத்து காரியமும் சுபமாகவும், வெற்றியாகவும் நிறைவேறும். உங்கள் திறமை மீது அல்லது உங்களது முகராசி மீது அல்லது உங்களது அனுபவத்தின் மீது உங்களுடைய நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் கண்ணேறு இருந்தால் ... அதனையும் இந்த திருநீறு எடுத்துவிடும். எந்த துர் சக்தியையும் எம்மை நெருங்க விடாது.
உங்களது வீடுகளில் எதிர்மறையான ஆற்றல் இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால்... உடனடியாக வெட்டிவேரினை சிறிதளவு வெட்டி தண்ணீரில் ஊறவைத்து ஓர் இரவு நன்றாக ஊறிய பின், அதனை மறுநாள் உங்கள் வீட்டில் நான்கு மூலை பகுதிகளிலும் சிறிதளவு தெளித்தாலே... உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் மறைந்து விடும். மகாலட்சுமி வாசம் செய்வாள். உங்களுக்கும் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிம்மதியும் கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM