வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதித்த அரச அதிபர்

Published By: Robert

05 Feb, 2017 | 01:16 PM
image

தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தடை விதித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையின் கீழ் இ.போ.சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுள்ளது.

இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன.

இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனுமதித்த வவுனியா அரச அதிபர் கூட்டம் ஆரம்பமாகியதும் வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்ற அவர்களது பிரத்தியேக ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

இதேபோல் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் அங்கு நடந்தவற்றை வீடியோ மூலமும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து வெளியிட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களை மட்டும் வெளியேற்றியமை எவ்வகையில் நியாயமானது என ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இலங்கையில் தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணித்தியாலங்களில் பிராந்திய ஊடகவியலாளருக்கு எதிரான ஊடக அடக்குமுறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32