குதிகால் வலியை குறைப்பதற்கான எளிய சிகிச்சை

15 Aug, 2023 | 05:32 PM
image

எம்முடைய இளம் பெண்கள் வணிக வளாகங்களிலும், விருந்து மற்றும்  உறவினர்களின் சுப வைபவங்களிலும் பெசனுக்காக குதிகால் உயர் காலணியை அணிந்து பங்கு பற்றுகிறார்கள். 

வேறு சிலர் விவரிக்க இயலாத காரணத்தினால் காலையில் எழுந்ததும் குதிகால் வலியால் தவிக்கின்றனர். இந்த வலி சில மணிதியாலத்திற்குப் பிறகு அல்லது தொடர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட பிறகும் மறைந்துவிடும். 

ஆனால் சிலருக்கு இரண்டு வாரத்திற்கும் மேலாக காலையில் எழுந்ததும் குதிகால் பகுதியில் வலி இருந்தால் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனையும், சிகிச்சையையும் பெற வேண்டும்.‌

ஏனெனில் சில பெண்களுக்கு அவர்களுடைய மாதவிடாய் காலகட்டத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாலும் குதிகால் பகுதியில் வலி உண்டாகும். 

குதிகால் வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்  மருத்துவர்கள் பரிந்துரைத்த வகையில் பிரத்யேக எக்ஸ்ரே பரிசோதனையை மேற்கொண்டால், குதிகால் பகுதியில் புதிதாக ஒரு எலும்பு வளர தொடங்கி இருக்கும் அல்லது உருவாகி இருக்கும். 

இவை பாரிய பின்விளைவை ஏற்படுத்தாது என்றாலும், இதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எளிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.  பொதுவாக இதன் போது மருத்துவர்கள் காலில் அணிந்து கொள்வதற்கு பிரத்யேக காலணிகளை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைப்பர் அந்த காலணிகளை வீட்டின் உள்பகுதியிலும் அணிந்திருக்க வேண்டும் என பரிந்துரைப்பர். 

சிலருக்கு இதன் போது சிறப்பு இயன்முறை பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவர். 

சிலருக்கு இதன் பின்னரும் குதிகால் வலி தொடர்ந்தால் அவர்களுக்கு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு ஸ்டீராய்டு  மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி அப்பகுதி தசைகளை தளர்த்துவர். 

வெகு சிலருக்கு மட்டுமே  குதிகால் வலி என்பது ஆறு மாதத்திற்கு மேல் தொடர்ந்தால் அப்பகுதியில் உள்ள தசைகளை தளர்த்துவதற்காக சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். 

டொக்டர் ராஜ் கண்ணா

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41