சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக்காக கடந்த 3 தினங்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் அட்டன் நல்லதண்ணி ஊடாக வந்திருப்பதாகப் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாரியளவில் வாகனங்கள் சிவனொளி அடவிப் பகுதிக்கு வந்திருப்பதோடு, நல்லதண்ணியிலிருந்து மவுஸ்ஸாகெல வரையான 07 கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாத்திரிகர்கள் பலர் இசைக் கருவிகள் சகிதம் வந்திருப்பதனால் அவற்றை மஸ்கெலியா பொலிஸ் பாதைத் தடையில் விட்டு செல்ல பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு மவுஸ்ஸாகெல, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக யாத்திரிகர்களுக்கு பொலிஸாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள், மதுபானம் மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை யாத்திரிகர்கள் தம்முடன் எடுத்துவரக்கூடாது என நல்லதண்ணி பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM