ஹக்கல வனப்பகுதியில் காட்டு தீ ! 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

Published By: Digital Desk 3

15 Aug, 2023 | 01:29 PM
image

நுவரெலியா, ஹக்கல வனப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை காட்டுத்தீ பரவியுள்ளது.

குறித்த காட்டு தீயை நுவரேலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள்  கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவினர் பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் ஹக்கல பூங்கா பாதுகாவலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். 

காட்டுத் தீயானது சுமார் ஐந்து மணித்தியால போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், மலையின் உச்சியில் ஏற்பட்ட தீ பாரியளவு ஏற்படாமல் இருப்பதற்காக பட்டிபொல வனப் பகுதியில் இருந்து வன பாதுகாப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ காரணமாக சுமார் 15 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் கெப்பட்டிபொல பொலிஸ் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39