பூக்களின் குணங்கள்

Published By: Ponmalar

15 Aug, 2023 | 01:02 PM
image

பூங்களுள் சிறந்தது தாமரைப்பூவே. வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. 

மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. 

திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. 

பெளர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும். 

முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. 

பூக்களின் குணங்கள் 


வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். 

சிவப்பு வர்ணப்பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும். 

பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும் மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும். 

கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது. 

எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?

 
தற்போது எல்லோர் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. 

காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும். 

தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம். 

இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணு கிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38
news-image

பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்?...

2023-07-05 16:35:15
news-image

அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல்...

2023-07-04 17:22:00
news-image

ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில்...

2023-07-03 13:15:38
news-image

சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசு : உயிருக்குப்...

2023-07-01 12:05:18
news-image

ஹை ஹீல்ஸுடன் 100 மீற்றர் ஓடுவதில்...

2023-06-29 16:42:14