பதுளை - ஹல்துமுல்லையில் பாடசாலையொன்றில் திருடிய இராணுவ சிப்பாய் கைது

Published By: Digital Desk 3

15 Aug, 2023 | 12:31 PM
image

பதுளை ஹல்துமுல்ல சொரகுனே பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்குள் புகுந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாயொருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் எனவும், புனானி இராணுவ முகாமில் சேவையாற்றும், பொறியியலாளர் படைப்பிரிவின் சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் சங்கீத வகுப்பறையை உடைத்து மல்டி மீடியா, புளூடூத், சீடி பிளேயர்  உள்ளிட்ட உபகரணங்களையே களவாடியுள்ளார்.

திருடப்பட்ட மல்டிமீடியாவை 25 ஆயிரம் ரூபாவிற்கு தியத்தலாவ பிரதேசத்திற்கு விற்று சந்தேக நபர் பணம் பெற்றுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின் ஆலோசனையின் பேரில், ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீர உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13