FIFA வின் பரிந்துரைகளுக்கு தலைவணங்கியது FFSL ; செப்டெம்பர் 29இல் FFSL தேர்தல் 

Published By: Vishnu

15 Aug, 2023 | 12:46 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் (FIFA) கடுமையான பரிந்துரைகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) தலைவணங்கி தேர்தல் பொதுக்கூட்டத்தை செப்டெம்பர் 29ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நியமிக்கப்பட்ட ஏ.ஜி.சி. தேசப்ரிய தலைமையிலான இடைக்கால செயற்குழுவினால் திங்கட்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்மேளன அதி விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றும் பொருட்டு இடைக்கால செயற்குழுத் தலைவர் ஏ.ஜி.சி. தேசப்ரிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை தயாரித்து கால்பந்தாட்ட லீக்குகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்திருந்தார்.

ஆனால், இந்த விடயம் தொடர்பாக FIFAவுக்கு அறியக்கிடைத்ததை தொடர்ந்து, FFSL அதிவிசேட கூட்டத்தில்  தேர்தலைத் தவிர்ந்த கையாளப்படவேண்டிய மற்றைய அனைத்து விடயங்களையும் FFSL நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவர் கொண்ட இடைக்கால குழு ஒத்திவைக்கவேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது நேரடியாக கையாள வேண்டும் என FIFA  பரிந்துரைத்திருந்தது.

FIFAவின் இந்த பரிந்துரைக்கு தலைவணங்கிய FFSL, ஏ.ஜி.சி. தேசப்ரிய தலைமையிலான அதிவிசேட  பொதுச் சபைக்  கூட்டத்தில் FFSL தேர்தல் தொடர்பான தீர்மானங்களை மாத்திரம் எடுத்தது.

இதற்கு அமைய திங்கட்கிழமை நடைபெற்ற FFSL  அதிவிசேட  பொதுச் சபைக் கூட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தை செப்டெம்பர் 29ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுக்களை தேர்தல் குழுவிடம் தாக்கல் செய்யுமாறு தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் கோரப்பட்டுள்ளனர்.

தலைவர், 4 உதவித் தலைவர்கள், 8 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின்மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செயப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அடுத்து வரும் தேர்தலையும் முன்னின்று நடத்தவுள்ளனர்.

இதேவேளை, அதிவிசேட கூட்டத்தின்போது மேன்முறையீட்டுக் குழு ஒன்றும்  பிரேரிக்கப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெறும் ஒரு உறுப்பினர் தொடர்பாக ஆட்சேபம் எழுப்பப்பட்ட போதிலும் பிரேரிக்கப்பட்ட குழு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பதற்கு செப்டெம்பர் 1ஆம் திகதியிலிருந்து 3ஆம் திகதிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டுக் குழு ஆட்சேபனைகளை செப்டெம்பர் 4ஆம் திகதி பரிசீலித்து அன்றைய தினமே தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களை வெளியிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00
news-image

இத்தாலி டயமண்ட் லீக்கில் ருமேஷ் தரங்க...

2026-06-05 10:17:30
news-image

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி...

2026-06-04 17:50:11
news-image

குவாட்ரங்கிள் கிண்ண வருடாந்த கோல்ஃப் தொடர்...

2026-06-04 20:04:15
news-image

துடுப்பாட்டத்தில் பெத்தும், குசல் அபாரம்; கேர்ஸ்டனின்...

2026-06-04 11:21:38
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள்...

2026-06-03 18:38:05