சிட்னியிலிருந்து மெல்பேர்னிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்துள்ளார்
முகமட் அரீவ் என்பவரே நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்துள்ளார்
நேற்று சிட்னியிலிருந்து புறப்பட்ட எம்எச்122 விமானத்தில் இவர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டு விமானம் மீண்டும் சிட்னி விமானநிலையத்திற்கு திரும்பியது. விமானபயணத்தின்போது ஆண்பயணியொருவர் குழப்பமான விதத்தில் செயற்பட்டு தன்னிடம் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்தார் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு எதிராக போலி மிரட்டலை விடுத்தமை விமானத்தை சேதப்படுத்தியமை விமானபணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதற்காக இவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்நிலையில் இன்று அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து சிறைச்சாலைக்கு வருவதற்கு மறுத்துள்ளார்.
இதன் பின்னர் விசாரணைகள் வீடியோ மூலம் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து நீதிமன்றத்திற்குதகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் நீதிமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பை நீதிமன்ற பணியாளர்கள் பல தடவை வழங்கிய போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
இதேவேளை தனது கட்சிக்காரருக்கு உளநலசோதனைகளை நடத்துமாறு அவரின் சட்டத்தரணி கோரியுள்ளார்.
எனது கட்சிக்காரரால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதன்கிழமை வரை நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று குறிப்பிட்ட நபர் விமானத்தில் சத்தமிட்டதை காண்பிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
விமானம் புறப்பட்டு அரைமணித்தியாலத்தின் குழப்பமடைந்த அவர் பயணிகளை தள்ளிவிடத்தொடங்கினார் என சக பயணியான வேலுதா பரம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் மூர்க்கமானவராக மாறத்தொடங்கினார் போதிக்க தொடங்கினார் எனஅவர் தெரிவித்துள்ளார்.
அவர் கையில் எதனையோ கட்டியிருந்தார் ஒவ்வொருமுறையும் அவர் கதைக்கும்போது நான் உயிரிழக்க அஞ்சவில்லை என்னிடம் ஏதோ இருக்கின்றது போல தெரிவிக்கின்றார் போல தோன்றியது இதன் காரணமாகவே விமான பணியாளர்கள் அச்சமடைந்திருக்கவேண்டும் என வேலுதா பரம்பத் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM