மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை ஆகியோர் திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அப்போஸ்தலிக்க நன்சியோ மற்றும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ்.சந்துரூ பெர்ணான்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.
திருவிழா திருப்பலியை ஒட்டி மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM