கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற வேன் ஏ - 9 வீதியில் விபத்து : 3 பேர் பலி !

15 Aug, 2023 | 07:29 AM
image

ஏ - வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்து விபத்து மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சன்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15 ) காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமரடைந்தவர்கள் கிளிநொச்சி  மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06