(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி யாருக்கு அதிகாரங்களை பகிர போகிறார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அதிகார பகிர்வுக்கு எதிரான எதிர்ப்புக்களை ஜனாதிபதி வலுப்படுத்தி தேவையில்லாத பிரச்சினைகளையே தோற்றுவிக்கிறார் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேவையற்ற முரண்பாடுகளை ஜனாதிபதி தோற்றுவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டின் போது அதிகார பகிர்வுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
மாகாண சபைத்தேர்தலை நடத்துவது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்கவில்லை.
ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குகின்றன. நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களை ஆளுநர்கள் செயற்படுத்துகிறார்கள்.
இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாமல் ஜனாதிபதி யாருக்கு அதிகாரங்களை பகிர போகிறார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் பாராளுமன்றத்தில் எதனையும் செயற்படுத்த முடியாது.
நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அவர் 13 ஆவது திருத்த விவகாரத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்காலாம் ஆனால் அவர் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை செயற்படுத்தாமல் சட்டவாக்கத்துறையை நாடியுள்ளார்.
அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுரன செயற்படுகிறது.
ஆகவே 13 ஆவது திருத்துக்கு எதிராக எதிர்ப்புக்களை வலுப்படுத்தி அதிகார பகிர்வு விவகாரத்தை ஜனாதிபதி சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM