ஈழத்து எழுத்தாளரும் சமூக சிந்தனையாளரும் உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரனின் 'குடும்பம் ஒரு கதம்பம்' நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (12) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலையகத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு கலாநிதி தி. செல்வமனோகரன் தலைமைதாங்கினார்.
இதன்போது நூலாசிரியரான கோகிலா மகேந்திரன் 'உறவுகள்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றியதை தொடர்ந்து, வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அடுத்து, நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளர் கந்தர்மடம் அ. அஜந்தன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 'குடும்பம் ஒரு கதம்பம்' நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் வெளியிட்டுவைக்க, வட மாகாண கல்வித் திணைக்கள வடமராட்சி வலய உளவள ஆலோசகரான சி. கருணாகரன் பெற்றுக்கொண்டார்.
நூல் தொடர்பிலான கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான அஜந்தகுமார், இராஜேஷ் கண்ணன் ஆகியோர் நிகழ்த்தியதோடு, ஏற்புரையினை கோகிலா மகேந்திரன் ஆற்றினார்.
இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரும் 60வது நிகழ்வாக இந்நூல் வெளியீட்டினை ஒழுங்குபடுத்திய 'ஜீவநதி' இதழின் பிரதம ஆசிரியர் பரணீதரன் நன்றியுரை வழங்கினார்.
மேலும், கல்வியியலாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
இந்நூலில் கோகிலா மகேந்திரன் எழுதிய திருமணம், குடும்பம், பெற்றோரியம் சார்ந்த உளவியல் மைய கட்டுரைகள் ஜீவநதி இதழில் தொடராக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM