(க.கமலநாதன்)

நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது.

Image result for பந்துல எம்.பி virakesari

எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.