யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

14 Aug, 2023 | 11:43 AM
image

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் சனிக்கிழமை (12)  காலை 6.30. மணிக்கு காரைநகர் - களபூமியில் உள்ள ஆலயத்திற்கு துப்பரவு வேலைக்காக சென்று, துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், அவர் வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் (வயது 63) என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53