நல்லிதண்ணி பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று நோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 71 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போ பஸ் நேற்று சுமார் 71 பயணிகளை நல்லதண்ணியிலிருந்து ஏற்றிக்கொண்டு ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடை செயலிழந்து நோர்வூட் ரொக்வூட் பகுதியில் மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தமது சாமர்த்தியதால் எதிர்பக்கத்திற்கு பஸ்ஸினை திருப்பி மண்மேட்டில் மோத வைத்து பஸ்ஸினை நிறுத்தியதனால் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பஸ்ஸின் பயணிகள் வேறு ஒரு பஸ்ஸின் மூலம் ஏற்றி ஹட்டன் வரை அனுப்பப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM