கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

14 Aug, 2023 | 03:59 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்துறை, தொடங்கொடையிலுள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் வீட்டு திருத்தப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மனைவி மற்றும் குழந்தையுடன் மனைவி வீட்டில் தங்கியிருந்த போதே அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய தினம்  அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த சிலர் குறித்த நபர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர்  களுத்துறை, நாகொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

தொடங்கொடை, டொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த மாத்தறை, ஆராச்கே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவருக்கும், சந்தேகநபர்களுக்கும் மத்துகம பிரதேசத்தில் உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன்  தொடர்பு இருக்கலாம் எனவும், அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்று இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியின் பல பகுதிகளில் செப்டெம்பர் 28...

2024-09-15 12:59:34
news-image

நிலத்தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2024-09-15 12:45:30
news-image

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில்...

2024-09-15 12:17:33
news-image

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து...

2024-09-15 12:05:57
news-image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்...

2024-09-15 11:59:35
news-image

ஹாலிஎல தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

2024-09-15 11:42:22
news-image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் ஐக்கியத்துக்கு...

2024-09-15 11:44:05
news-image

அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில்...

2024-09-15 11:07:09
news-image

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில்...

2024-09-15 12:22:52
news-image

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை...

2024-09-15 10:20:20
news-image

அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை...

2024-09-15 09:52:57
news-image

4 கிலோ நிறையுடைய அம்பருடன் ஹம்பாந்தோட்டையில்...

2024-09-15 09:50:46