(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் லங்கா பிறீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் 5ஆவது தோல்வியைத் தழுவியது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்ற லங்கா பீறீமியர் லிக் கிரிக்கெட் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை 89 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் பெற்ற இந்த எண்ணிக்கை அணி ஒன்றினால் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக பதிவானது.
ஜெவ்னா கிங்ஸின் 4 பிரதான வீரர்களான நிஷான் மதுஷ்க, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷொயெப் மாலிக், டேவிட் மில்லர் ஆகியோரது விக்கெட்களை கசுன் ராஜித்த கைப்பற்றி கோல் டைட்டன்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களும் துடுப்பெடுத்தாடிய போதிலும் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
எதிரணியின் பந்துவீச்சுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஜெவ்னா கிங்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
போட்டியின் 3ஆவது பந்தில் ரஹ்மானுலலா குர்பாஸ் (0) ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது கிறிஸ் லின் (4), ஷொயெப் மாலிக் (0), டேவிட் மில்லர் (5) ஆகிய மூவரும் களம் விட்டு வெளியேறினர்.
எந்தவொரு துடுப்பாட்ட ஜோடியினாலும் இணைப்பாட்டங்களைக் கட்டியெழுப்ப முடியாமல் போனது ஜெவ்னா கிங்ஸுக்கு பேரிடியாக அமைந்தது.
ஜெவ்னா கிங்ஸ் சார்பாக நால்வர் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகைளைப் பெற்றனர்.
துனித் வெல்லாலகே (22), அணித் தலைவர் திசர பெரேரா (13), மஹீஷ் தீக்ஷன (13 ஆ.இ.), டில்ஷான் மதுஷன்க (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் கசுன் ராஜித்த 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு குமார ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தப்ரெய்ஸ் ஷம்சி 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
90 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் டைட்டன்ஸ் 13.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டிம் சீஃபேர்ட் 55 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ச 15 ஓட்டங்களையும் சட் போவ்ஸ் ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
டிம் சீஃபேர்ட், சட் போவ்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM