வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வறுமை காரணமாக 17 வயதான மகளை, தந்தையின் அண்ணா (சிறுமியின் பெரியப்பா) வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM