மட்டு. கரடியனாற்றில் யானை தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் உயிரிழப்பு

13 Aug, 2023 | 12:27 PM
image

(கனகராசா சரவணன்)

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்று சனிக்கிழமை (12) இரவு குளத்தில் மீன்படிக்க சென்று வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். 

அப்போது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், அவர் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து சடலத்தின் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40