(நெவில் அன்தனி)
பி லவ் கண்டி அணிக்கும் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களால் பி லவ் கண்டி வெற்றிபெற்றது.
லங்கா பிறீமியர் லீக் நான்காவது அத்தியாயத்தில் ஜெவ்னா கிங்ஸ் எதிர்கொண்ட 4ஆவது தோல்வி இதுவாகும்.

மொஹமத் ஹரிஸ் குவித்த அபார அரைச் சதம், ஏஞ்சலோ மெத்யூஸின் 3 விக்கெட் குவியல் என்பன பி லவ் கண்டி அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
ஜெவ்னா கிங்ஸ் சார்பாக 41 வயதான ஷொயெப் மாலிக் 3 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்தபோதிலும் கடைசி ஓவர்களின்போது களைப்பு மிகுதியால் அவரால் அதிரடியில் இறங்க முடியாமல் போக அவரது அணிக்கு தோல்வியே மிஞ்சியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பி லவ் கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் ஜோடியினர் மொஹமத் ஹரிஸ், பக்கார் ஸமான் ஆகியோர் 33 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பக்கார் ஸமான் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் தினேஷ் சந்திமால் (1), சஹான் ஆரச்சிகே (2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேறினர். (63 - 3 விக்.)

எனினும் மொஹமத் ஹரிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஹரிஸ் 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (138 - 4 விக்.)
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 13 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஒரு பவுண்டறி, ஒரு சிக்ஸுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அசிப் அலி (6), இசுரு உதான (9) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் நுவன் துஷார 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
179 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில்
ஜெவ்னா கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதல் 5 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந்த 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது முதல் 3 ஓவர்களில் ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்த்தியிருந்தார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் (1), நிஷான் மதுஷ்க (8), சரித் அசலன்க (2) ஆகிய 3 முன்வரிசை வீரர்களும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் நடையைக் கட்ட, ஜெவ்னா கிங்ஸ் பெரும் நெருக்கடிக்குள்ளானது.

எனினும் 41 வயதான ஷொயெப் மாலிக் 4ஆவது விக்கெட்டில் கிறிஸ் லின்னுடன் 35 ஓட்டங்களையும், 5ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் 39 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் திசர பெரேராவுடன் 60 ஓட்டங்களையும் பகிர்ந்து ஜெவ்னா கிங்ஸுக்கு தெம்பூட்டினார். ஆனால், திசர பெரேரா ஆட்டம் இழந்ததும் ஜெவ்னா கிங்ஸின் வெற்றி வெகுதூரத்திற்கு சென்று விட்டது.
கிறிஸ் லின் 27 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 24 ஓட்டங்களையும் திசர பெரேரா 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷொயெப் மாலிக் 55 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 3 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM