வவுனியாவில்  இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் இரண்டாம் நாளாக தொடர்கின்ற உண்ணாவிரத போராட்டத்தில்  13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர்களின் உடல் நிலையை சோதனையிடுவதற்காக சென்ற வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

வட மாகாணம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இன்றைய தினம் தமது ஆதரவினை வழங்கும் முகமாக யாழ்ப்பாண இ.போ.ச போக்குவரத்து ஊழியர்கள் வவுனியா  நகரிலிருந்து உண்ணாவிரதம் இடம்பெறும் வவுனியா இ.போ.ச சாலைக்கு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக நடந்து ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.