மகளிர் உலகக் கிண்ண அரை இறுதி அணிகள் தெரிவு

Published By: Sethu

12 Aug, 2023 | 08:24 PM
image

 2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிகளுக்கு, ஸ்பெய்ன், சுவீடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியன அணிகள் தெரிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2-1 கோல்கள் விகிதத்தில் ஸ்பெய்ன் வென்றது. மற்றொரு போட்டியில்  ஜப்பானை 2-1 விகிதத்தில் சுவீடன் வென்றது.

இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸை, இணை வரவேற்பு நாடான அவுஸ்திரேலியா பெனால்டி முறையில் 7-6 கோல்கள் விகிதத்தில் வென்றது. இன்று நடைபெற்ற 2 ஆவது கால் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை இங்கிலாந்து 2-1 விகிதத்தில் வென்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெறவுள்ள அரை இறுதிப்போட்டியில் ஸ்பெய்னும் சுவீடனும் மோதவுள்ளன. 16 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.  இறுதிப்போட்டி 20 ஆம் திகதி சிட்னியில் நடைபெறள்ளது.

இம்முறை அரை இறுதிக்குத் தெரிவான அணிகள் எதுவும் இதுவரை மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53