திருகோணமலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்!

12 Aug, 2023 | 06:07 PM
image

(கனகராசா சரவணன்)

திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கடலுக்கு சென்றவர் இன்று (12) பகல் வரை கரைக்கு திரும்பவில்லை. 

அவரின் கையடக்க கைப்பேசிக்கு தொடர்பு ஏற்படுத்தியபோதும் அது இயங்காததையிட்டு அவரது உறவினர்கள்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் லங்காபட்டுண கடற்படை முகாமில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் கடற்படையினரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28